பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு :


Posted by-Kalki Teamசூடான சாதத்தில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து செய்த புளிக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 20

கறிவேப்பிலை - சிறிது

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவையானது

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

வெல்லம் - சிறிது

தாளிக்க :

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

க.பருப்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதங்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் போடவும். பொடி வாசம் போக வேண்டும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை போடவும்.

அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போடவும்.

குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்க்கவும்.

குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

இதோ... சூப்பரான பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு தயாராகிவிட்டது.


Post Comment

Post Comment