#சிவமணி #ஒரு #இசைச் #சுரங்கம் : #ஏ.ஆர்.ரகுமான் #புகழாரம்


Posted by-Kalki Teamஅதர்வா, கேத்ரின் தெரசா, தருண் அரோரா, கருணாகரன் நடிக்கும் கணிதன் படத்தை ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் டி.என்.சந்தோஷ் இயக்கி உள்ளார். ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார். அவர் இசை அமைக்கும் இரண்டாவது படம் இது. கலைப்புலி எஸ்.

தாணு தயாரித்துள்ளார். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை வெளியிட்டு ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது: நான் சென்னையில் இருக்கும்போது இதுபோன்ற சில நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். கடந்த முறைகூட டிரம்ஸ் சிவமணி நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டதாக நினைவு.

குடும்ப விழாவில் கலந்து கொண்டது போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய இயக்குனர்களின் முகங்களை பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி இந்த படத்துக்கு கொஞ்சம் தான் இசை கொடுத்திருக்கிறார். இன்னும் அவரிடம் நிறைய இசை இருக்கிறது. அவர் ஒரு இசைச் சுரங்கம்.

அதில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டே இருக்கலாம் என்றார். விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசை கலைஞர்கள் விக்கு விநாயகம், காரைக்குடி மணி, இயக்குனர் அட்லி, அதர்வா, கேத்திரின் தெரஸா, கருணாகரன். எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post Comment

Post Comment