காரைக்கால் அம்மையார் கோவில்( மாங்கனி திருவிழா)


Posted by-Kalki Teamகாரைக்கால் அம்மையார்

இம்மாத பவுர்ணமியன்று சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர். மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது. அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும்.

பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும்.

அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.

பங்குனியிலும் அம்மையார் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது.

காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும்.

இத்திருவிழா கடந்த 6ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.

மறுநாள் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது.

பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல்,சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சியில் காரைக்கால் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதிநாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர்,அம்பாள், வள்ளி தெய்வாணை,சமேதராக முருகன்,விநாயகர்,

சண்டிகேஸ்வரர்,சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.பின் சந்தனம்,மஞ்சள்,பால்,தேன்,பன்னீர், அண்ணம்,பழரசங்கள்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Post Comment

Post Comment