நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் கதை என்ன? வாங்க நாம் பார்க்கலாம்!


Posted by-Kalki Teamமேகாலயாவின் சிரபுஞ்சியில் காணப்படும் ஒரு நீர்வீழ்ச்சி தான் இந்த நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியாகும். பூமியில் காணப்படும் ஈரமான இடங்களுள் இதுவும் ஒன்று. 1,115 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான வீழ்ச்சியாகவும் விளங்குகிறது. குளத்திலிருந்து வரும் தண்ணீர் வீழ்ச்சியாக உருவாக, அதன் நிறமானது பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது.

பசுமையான பகுதிகளாலும், மிதமான மேகங்களாலும், நீர்வீழ்ச்சியாலும் சூழ்ந்த இந்த இடம் பெரும்பாலும் மழை பெய்தவாறே காணப்படுகிறது.

இந்த விசித்திரம் நிறைந்த நீர்வீழ்ச்சி, பார்வையாளரை விட்டுசெல்லும் என்னும் துயர மரபும் குறிக்கப்படுகிறது. காசி சொல்லான இந்த நோஹ்கலிகையை நாம் மொழிமாற்றம் செய்து பார்க்க ஜம்ப் ஆப் கா லிகை என்ற பொருள் தருகிறது. கா என்னும் முன் சொல்லுக்கு காசி மொழியில், பெண் என அர்த்தமாகும். லிகை என்னும் கடைசி சொல்லுக்கு கொடூரமான கதை ஒன்று தெரியவர, அது என்ன? என்பதை தொடர்ந்து படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியின் கதை:

புராணங்களின் வாயிலாக இந்த நீர்வீழ்ச்சியின் கதையை இப்பொழுது நாம் பார்க்கலாம்...

ரான்ஜிர்தே என்னும் கிராமத்தில் வாழ்ந்த இளம் தாய் ஒருவளின் பெயர் லிகை ஆகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாழ்ந்து வந்த இவள், இளம் வயதிலே விதவை கோலம் கொண்டாள். அதன் பிறகு தன் கணவன் பணியான சுமை தூக்கும் வேலையை அவள் செய்து வந்தாள்.

அவளுக்கு சிறிய பெண் குழந்தை ஒன்று இருந்தது. இருப்பினும், அவளால் அந்த குழந்தையை கவனித்துகொள்ள முடியவில்லை. இயற்கையாக, அவள் வீட்டில் இருக்கும்பொழுது, தன் மகளுடனே நேரத்தை முழுவதுமாக செலவிட்டாள். கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களின் தூண்டுதலால், அந்த குழந்தைக்கு ஒரு தகப்பன் வேண்டும் என அவள் முடிவெடுத்தாள். அதனால், ஒருவனை மீண்டும் அவள் திருமணம் செய்துகொண்டாள்.

அந்த புது கணவன் குறுகிய மனப்பான்மையுடன் இருக்க, அவள் வீட்டிலிருக்கும்போது குழந்தை மீது காட்டும் பாசத்தை கண்டு பொறாமையையும் கொண்டான். அவனுடைய தாழ்ந்த மனப்பான்மை தரக்குறைவாக யோசிக்க, கோரமான செயலை செய்ய துணிந்தது. அவன் செய்த அந்த கோரச்செயல், அந்த நீர்வீழ்ச்சிக்கு துரதிஷ்டவசமாக இருந்தது.

ஒரு நாள் தன் மனைவிக்காக மனமாற சமைத்து வைத்திருந்தான் அவன். அவள் வேலை முடிந்து மிகவும் களைப்புடனும் பசியுடனும் வர, குழந்தையை சுற்றும் முற்றும் தேடினாள். ஆனால், குழந்தையோ அவள் கண்களுக்கு தென்படவில்லை. ஒருவேளை, குழந்தை தன் அருகில் இருக்கும் வீட்டில் இருப்பதாய் மனதில் யூகித்துகொண்டு, தன் கணவன் சமைத்த உணவை சாப்பிட தயாரானாள்.

இந்த துயர கதை எங்கே போகிறது என்பதை நீங்கள் யூகித்திருப்பதாய் நான் நம்புகிறேன். ஆம், அந்த குழந்தையின் மீது அவனுக்கு பொறாமை இருந்தது. அதனால், அந்த அப்பாவி குழந்தை வெட்டப்பட்டு, அதனை சமைத்து தன் மனைவிக்கும் ஊட்டிவிட்டான் அந்த கொடூரன். அவன், குழந்தையின் தலையையும், எழும்புகளையும் லிகை வீட்டுக்கு வரும்முன்பே வீசிவிட்டு ஏதும் நடவாதது போல் பாசாங்கு செய்துகொண்டிருந்தான்.

இந்த கொடூர செயலை அறியாத லிகை, தினமும் சாப்பிடுவதுபோல் சகஜமாக சாப்பிட்டுகொண்டிருந்தாள். அவள் சாப்பிட்டு முடித்த பிறகு வழக்கம்போல் வெற்றிலையும், பாக்கும் கொண்டு மென்று, அதனை கூடையில் துப்பினாள். அப்பொழுது, கூடைக்கு அருகில் சிறு விரல் ஒன்று கிடப்பதை பார்த்த அவள், அது தன் குழந்தையுடையது என்பதையும்

கண்டுபிடித்தாள்.

என்ன நடந்தது? என யோசித்து தலையை பிய்த்துகொண்டு நின்றாள். அங்கே நடந்த சம்பவங்கள் பேராபத்துமிக்கது என்பதை உணர்ந்த அவள், தன் மகளுக்கு என்ன ஆனது? என்னும் பதட்டத்தில் வேகமாக ஓடிசென்று வீழ்ச்சியின் முனையில் நின்று, தவறினை எண்ணி கீழே விழுந்தாள். இத்தகைய புராணத்தினாலே, இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் நோஹ்கலிகை என வந்தது.

நோஹ்கலிகை வீழ்ச்சியை காண சிறந்த நேரங்கள்:

இந்த துரதிஷ்டமான புராணத்தை கண்டு நீங்கள் இந்த வீழ்ச்சியை காண்பதை நிறுத்த வேண்டாம். இந்த நீர்வீழ்ச்சி இயற்கையிலே சிறந்ததாகும். பருவமழை மாதங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்கள், இந்த நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த கால நிலைகளில் நீரில் நாம் மூழ்கும் அளவுக்கு நீர்வீழ்ச்சி பெருகி மனதை மகிழ்விக்கிறது.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் நாம் தவிர்க்க வேண்டியவையாகும். இந்த நேரங்களில் கால நிலை வரண்டு காணப்பட, நீர்வீழ்ச்சியின் அளவும் குறைவாகவே காணப்படுகிறது.

நோஹ்கலிகை வீழ்ச்சிக்கு அருகில் நாம்

பார்க்க வேண்டிய இடங்கள்:

இந்த வீழ்ச்சியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மாவ்சை குகை காணப்படுகிறது. இந்த குகையானது இருளில் படர்ந்து அழகிய அனுபவத்தை உங்களுக்கு தருகிறது. நாஷ்ன்கிதைங்க் வீழ்ச்சி மற்றும் டைந்த்லான் வீழ்ச்சி, அச்சமும், மதிப்பும் தரக்கூடிய அருகில் காணும் இரண்டு நீர்வீழ்ச்சிகளாகும்.

சிரபுஞ்சியில் காணப்படும் வாழும் வேர்கள் பாலம் என்பது மற்றுமோர் மனதை கவரும் அழகிய இடமாகும். இங்கே இரண்டு வரிசையில் பாலங்கள் அமைந்திருக்க, ரப்பர் மரங்களின் வான் வேர்களால் உருவாகி காணப்படுகிறது. சுமார் 50 பேரால் இறுக்கி பிடித்ததை போன்று வலிமையாக இருக்கிறது இதன் வலிமை.

நோஹ்கலிகை நீர்வீழ்ச்சிக்கு நாம் செல்வது எப்படி:

ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி:

நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியிலிருந்து வடக்கில் 166 கிலோமீட்டர் தொலைவில் கவுஹாத்தி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான தில்லி, பெங்களூரு, அஹமதாபாத் என சேவை இணைக்கப்பட்டிருக்க...விமான நிலையத்திலிருந்து கார் அல்லது பேருந்தின் மூலம் நாம் வீழ்ச்சியை அடைகிறோம்.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி:

140 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கவுஹாத்தி இரயில் நிலையம் தான் அருகில் காணப்படும் ஒன்றாகும். இங்கிருந்து அரசு பேருந்து அல்லது காரின் மூலம் நாம் வீழ்ச்சியை அடையலாம்.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி:

கவுஹாத்தியிலிருந்து சிரபுஞ்சிக்கு நாம் செல்ல தோராயமாக 4 லிருந்து 5 மணி நேரம் வரை ஆகிறது. சிரபுஞ்சியிலிருந்து 10 நிமிடங்கள் பயணத்தின் வாயிலாக நாம் வீழ்ச்சியை அடைகிறோம். விமான நிலையத்திலிருந்து சுற்றுலா கார் மூலமாகவோ, மற்றும் இரயில்தடம் அல்லது மாநிலத்திற்கு இடையே செல்லும் பேருந்துகள் மூலமாகவோ நாம் கவுஹாத்தியிலிருந்து வீழ்ச்சியை அடையலாம்.


Post Comment

Post Comment