கருவறையில் தெய்வச் சிலைகளை கருங்கல்லில் ஏன் வைக்கிறார்கள்?


Posted by-Kalki Teamகருங்கல்லில் பஞ்சபூதங்களின் ஆற்றலும் நிரம்பியுள்ளது. அதில் நீர்ச்சத்து இருப்பதால்தான் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது. அதில் நிலத்தின் தன்மை இருப்பதாலேயே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன. நெருப்பின் அம்சம் இருப்பதாலேயே கற்களை உரசும் போது தீப்பொறி பறக்கிறது.

கல்லில் காற்றும் உள்ளதால்தான் கல்லில் தேரைகள் உயிர் வாழ்கின்றன. ஆகாயத்தை உள்லடக்கி இருப்பதால்தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நம் குரல் நமக்கு எதிரொலிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் இருப்பதால்தான் கருங்கல்லில் விக்கிரகங்கள் வடிக்கிறார்கள். அதற்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது. அங்கு சென்று வணங்குவோருக்கும் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாககிறது.


Post Comment

Post Comment