உடலுக்கு சத்தான குதிரைவாலி - கேழ்வரகு கூழ் :


Posted by-Kalki Teamசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி, கேழ்வரகை வைத்து சத்தான கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,

கேழ்வரகு மாவு - 200 கிராம்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 10,

தயிர் - 1/2 கப்,

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீரை ஊற்றி தோசை மாவுப் பதத்திற்கு கரைத்து மூடி புளிக்க வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது இறக்கவும்.

பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.


Post Comment

Post Comment