சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா :


Posted by-Kalki Teamசிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காலையில் சிவப்பு அவலை வைத்து சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - 200 கிராம்,

இளநீர் - 1,

சின்ன வெங்காயம் - 10,

தக்காளி - 1,

இஞ்சி - 1 துண்டு,

மிளகு - 10,

சீரகம் - அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

தனியா தூள் - 1 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,

கடுகு - சிறிது,

நல்லெண்ணெய் - சிறிது,

கொத்தமல்லி - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப.

Ads by ZINC

செய்முறை :

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை சுத்தம் செய்து, இளநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், இஞ்சி போட்டு தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக இளநீரில் ஊற வைத்த அவலையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.


Post Comment

Post Comment