மேரி பிஸ்கட் கேக் :


Posted by-Kalki Teamதேவை: மேரி கோல்டு பிஸ்கட் - 1 பாக்கெட்

காபி மிக்ஸ் செய்ய: பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், அனைத்து உபயோக மாவு - 3 ½ டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1 ½ டீஸ்பூன், பால் - ½ கப்.

சாக்லெட் மிக்ஸ் செய்ய: பட்டர் (உப்பில்லாதது) - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - ½ டேபிள்ஸ்பூன், சாக்லெட் பவுடர் - ½ டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

1. காபி மிக்ஸ் செய்ய கொடுத்துள்ளவற்றைப் பயன்படுத்தி காபி மிக்ஸ் செய்யவும்.

2. பிஸ்கட்டை உடையாதவாறு காபி மிக்ஸில் ஊறவைத்து பாக்கெட்டில் இருப்பதுபோலவே வரிசையாக அடுக்கவும். முடிந்தால் அலுமினியம் ஃபாயில் பேப்பரில் வைக்கலாம்.

3. வெண்ணெயை உருக்கி, அதில் சர்க்கரை 6 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர், சாக்லெட் பவுடர் சேர்த்து கெட்டியான மிக்ஸ் தயார் செய்யவும்.

4. சாக்லெட் மிக்ஸை ஊறிய பிஸ்கெட்டின் மேல் ஊற்றி அலுமினிய ஃபாயிலை மூடவும்.

5. இதை குறைந்தது 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சூப்பரான மேரி சாக்லெட் கேக் தயார்.Post Comment

Post Comment