அடி வயிற்றுச் சதை குறைய...


Posted by-Kalki Teamக்ரன்சஸ்:

தரையில் நேராகப் படுத்துகொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு கைகளை வைத்துக் கொள்ளவும். மேற்புற உடலை மட்டும் முடிந்தவரை மேல்நோக்கி தூக்கி பின் பழைய நிலையை டையவும்.

ரிவெர்ஸ் க்ரன்சஸ்:

தலையின் பின்புறம் கைகளை மடக்கி வைத்தவாறு தரையில் படுத்துகொண்டு முழங்கால்களை மடக்கவும். பின் முடிந்தவரை மடக்கியபடியே கால்களை மேல்நோக்கி உயர்த்தி பின் மீண்டும் பழைய நிலையை அடையவும்.

ட்விஸ்ட் க்ரன்சஸ்:

தலையின் பின்புறம் கைகளை மடக்கி வைத்தவாறு தரையில் படுத்துகொண்டு முழங்கால்களை மடக்கவும். இடது முழங்கை வலது முழங்காலை தொட்டு பின் பழைய நிலைக்கு வரவும். இதேபோல் வலது முழங்கை இடது முழங்காலை தொடவேண்டும்..

வெர்டிகல் க்ரன்சஸ்:

தரையில் நேராக படுத்துக்கொண்டு கைகளை தரைக்கு நேரே மேல்நோக்கி நீட்டவும். கைகளை தரையில் ஊன்றாமல் உடலை மட்டும் மேல்நோக்கி உயர்த்தவும். கைகளை நீட்டி பாதங்களை தொட்டு மீண்டும் பழைய நிலையை அடையவும்.

பைசைக்கிள் க்ரன்சஸ்:

தலையின் பின்புறம் கைகளை மடக்கி வைத்தவாறு தரையில் படுத்துகொண்டு முழங்கால்களை மடக்கவும். வலதுகையை மடக்கும்போது இடதுகாலை மடக்கவும். இடதுகையை மடக்கும்போது வலது காலை மடக்கவும். ஆனால் கைகளும் கால்களும் தொட வேண்டிய அவசியமில்லை. சைக்கிள் ஓட்டுவதைப்போல செய்யவேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 20 முறை 3 நிமிட இடைவெளியில் செய்து முடிக்கவும். இதையே 2 அல்லது 3 தடவை செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். உணவு கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சி மிகமிக அவசியம்.


Post Comment

Post Comment