திருமணத் தடை நீங்கும்


Posted by-Kalki Teamஇழுபறியான வழக்குகள், திருமணத் தடை, நோய்கள் அகல கீழ்ப்பாவூர் ஸ்ரீநரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் வந்து வணங்கினால் நல்ல தீர்வு கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. பானகமும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அப்போது

தேங்காய் மூடிகளில் நெய்தீபம் ஏற்றி வைத்து, பிராகாரத்தை 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும்.

திருநெல்வேலி – தென்காசி சாலையில் சுரண்டையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர்.


Post Comment

Post Comment