புத்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான்!


Posted by-Kalki Teamகைகளால் இயக்கும் ரிக்‌ஷா மறைந்து, மோட்டார் பொருத்திய ஆட்டோ வந்தது. தற்போது எளியவர்களும் பயணிக்கத் தக்க கார் பயணம் களைக் கட்டுகிறது. அவசர கதியில் இயங்கும் மக்களைப் போல், வண்டிகளின் வேகத்தை ஈடுகட்ட, நாலுகால் பாய்ச்சலில் காரின் அவசியம் தேவையாகிவிட்டது.

ஆனால், அசைந்து அசைந்து சூழலை ரசித்து போகும் ரிக்‌ஷா பயணத்துக்கு ஈடு இணையே இல்லை.

புதுச்சேரியில் தற்போது ரிக்‌ஷாக்களுக்கு தான் மவுசு அதிகரித்திருக்கிறது. தங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும் நிலையில், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம் ஸ்டாண்டில் உள்ள அனைத்து

ரிக்‌ஷாக்காரர்களும் குழுவாக இணைந்து, அங்கு வரும் சுற்றுலா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ஓட்டத் தொடங்கியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து சுமார் 2 மணி நேரத்துக்குள் அனைத்து இடங்களையும் சுற்றி காட்டி விடுகின்றனர். 2 பேர் பயணிக்கலாம்.

400 ரூபாய் வசூலிக்கின்றனர். உள்ளூர் வாசிகளும், ரிக்‌ஷாவில் பயணிக்க ஆர்வம் காட்டி வருவது சந்தோஷம் என்கிறார் ஒரு ரிக்‌ஷாக்காரர்.Post Comment

Post Comment