யோகா டீச்சரான மலர் டீச்சர் சாய் பல்லவி :


Posted by-Kalki Teamபிரேமம் சாய் பல்லவி நடனத்தில் புகழ் பெற்றவர். பள்ளிப்பருவத்தில் இருந்தே நடனமாடி ஏராளமான பரிசுகளை வாங்கி வந்த அவர், இப்போது தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, பங்குபெறும் டிவி ஷோக்களிலும் அதிரடி நடனமாடி கலக்கி எடுத்து வருகிறார். இதனால் கேரளாவில் சாய் பல்லவிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்களாம். இதனால் முன்பு மாதிரி அவரால் அம்மாவுடன் ஜாலியாக ஷாப்பிங் செல்ல முடிவதில்லையாம். மேலும், சிறுவயதில் இருந்தே தினமும் நடனமாடி வரும் சாய்பல்லவி, அதற்கு முன்பாக யோகா செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாராம். அதனால் படப்பிடிப்புகளுக்கு அவுட்டோர் செல்லும்போது, அதிகாலையிலேயே யோகாவை ஆரம்பித்து விடுகிறாராம் சாய் பல்லவி. அதோடு, தனது நட்பு வட்டார நடிகர் நடிகைகளிடமும் யோகாவின் சிறப்புகளை சொல்லி, அவர்களுக்கும் யோகா சொல்லி கொடுக்கும் டீச்சராகி விடுகிறாராம் மலர் டீச்சர்.


Post Comment

Post Comment