துருவ நட்சத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் கவுதம் மேனன் :


Posted by-Kalki Team`துருவ நட்சத்திரம் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநரான கவுதம் மேனன் வெளியிட்டிருக்கிறார்.

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம் படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச் படத்திலும் நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், `துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநரான கவுதம் மேனன், அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "55 டிகிரி வெயிலில் படப்பிடிப்பு முடிந்தது. படத்திற்காக கடுமையாக உழைத்த சியான் விக்ரம் மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார். முன்னதாக நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் அபுதாபியில் 55 டிகிரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்து வருகின்றனர்.


Post Comment

Post Comment