பொட்டேடோ லாலிபாப் :


Posted by-Kalki Teamஎன்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 4,

ரஸ்க் தூள் - 1/4 கப்,

எண்ணெய், உப்பு - தேவைக்கு,

இஞ்சி+பூண்டு+மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 1 டீஸ்பூன்,

ஓமம் - 1/2 டீஸ்பூன்,

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,

துருவிய காலிஃப்ளவர் + கேரட் - 1/4 கப்,

நெய் - 1 டீஸ்பூன்,

லாலிபாப் ஸ்டிக் - ஐஸ்கிரீம் குச்சி அல்லது ஓம பிஸ்கெட் அல்லது சூப் பிஸ்கெட் (பேக்கரி கடைகளில் கிைடக்கும்).

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் இஞ்சி+பூண்டு+மிளகாய் விழுதை போட்டு வதக்கி காலிஃப்ளவர்+கேரட் துருவல், உருளைக்கிழங்கு, உப்பு, ஓமம், தனியாத்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறி, ரஸ்க் தூள் பாதி போட்டு கிளறி வேக விடவும். கொத்தமல்லித்தழையை தூவி கிளறி இறக்கவும். கலவையிலிருந்து சிறு உருண்டை எடுத்து தட்டையாக்கி நடுவில் ஐஸ் குச்சியை சொருகவும். தோசைக்கல்லை சூடாக்கி சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் லாலிபாப்பை ரஸ்க் தூளில் புரட்டி ேதாசைக்கல்லில் போட்டு இருபுறமும் வெந்ததும் சூடாக பரிமாறவும்.


Post Comment

Post Comment