திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்


Posted by-Kalki Teamதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள். கார்த்திகைதீப திருவிழா, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் கிரிவலத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி இந்த மாதத்திற்கான (ஆனி) பவுர்ணமி நேற்று காலை 8.08 மணிக்கு தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.46 மணிக்கு முடிகிறது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலையில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளிமாநில பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றதை காண முடிந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்ததால் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி கிரிவலம் சென்றனர்.

இரவு 7 மணியளவில் கிரிவலம் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. எங்குபார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

பக்தர்களுக்கு ஆங்காங்கே பல்வேறு அமைப்பினர் நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு தற்காலிக பஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.Post Comment

Post Comment