அஜீத்தை புகழும் விவேக் ஓப்ராய் :


Posted by-Kalki Teamஅஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்த படத்தை சிவா இயக்கி இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

விவேக் ஓப்ராய் வில்லனாக நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்போது, இதை இயக்குனர் மறுத்துள்ளார். இவருடைய பாத்திரம் என்ன என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருக்கிறது. அஜீத் எதிர் மறை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில் படமான இந்த படத்தில் நடித்தது பற்றி கூறியுள்ள விவேக் ஓப்ராய், இயக்குனர் சிவா, அஜீத் அண்ணன் ஆகியோருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத வியக்கத்தகுந்த அனுபவம். தல ரசிகர்களே, கவுன்டவுன் ஆரம்பமாகி விட்டது என்று கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்தையும், இயக்குனர் சிவாவையும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.


Post Comment

Post Comment