மீண்டும் ரிலீசாகும் `வனமகன், `இவன் தந்திரன் :


Posted by-Kalki Teamகடந்த 2 வாரங்களாக ரிலஸ் ஆன `வனமகன் மற்றும் `இவன் தந்திரன் படத்தினை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியான படம் வனமகன். ஜெயம் ரவி - சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன். இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார்.

திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

அதேபோல் ஆர்.கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் `இவன் தந்திரன். கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் - ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் ரிலீசான வாரமே தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2 வாரங்களாக வெளியான படத்தின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், படத்தினை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி படம் மறுபடியும் இன்று ரிலீசாகிறது.


Post Comment

Post Comment