3-வது முறையாக இணையும் ஆர்யா - ஜீவா :


Posted by-Kalki Teamலைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் 3-வது முறையாக ஆர்யாவும், ஜீவாவும் இணைகிறார்கள். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...

கடம்பன் படத்தையடுத்து அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும் இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார்.

அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே ஆர்யா நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்களில் சிறப்பு வேடத்தில் ஜீவா நடித்தார். இப்போது நடிக்கும் புதிய படத்தில் 2 பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.


Post Comment

Post Comment