காலா அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது :


Posted by-Kalki Teamரஜினி நடித்துவரும் காலா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மும்பையில் நடந்து காலா படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரஜினியை தவிர்த்து காலா படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். ரஜினி மட்டும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், காலாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற 10-ந் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் ஜுலை 12-ந் தேதி முதல் ரஜினி கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காலா படத்திற்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி. கார்டனில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் காலா படப்பிடிப்பு பல நாட்கள் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. காலா படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார் ஹுமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Post Comment

Post Comment