காலா படத்தில் நடிக்க ஆசை : தனுஷ்


Posted by-Kalki Teamகாலா படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் கூறியுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், இந்தி நடிகை கஜோல் நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி-2. ஷான்ரோல்டன் இசை அமைக்கிறார். மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, “சவுந்தர்யா, தனுசுக்கு இது வெற்றிப்படமாக அமையும். 20 ஆண்டுகளுக்குப்பின் தமிழில் கஜோல் நடித்தது மகிழ்ச்சி” என்றார். இயக்குனர் சவுந்தர்யா, “தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி. இந்த படத்தை என்னை நம்பி ஒப்படைத்த, என் நண்பர், வழிகாட்டி தனுசுக்கு நன்றி. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

விழாவில் பேசிய தனுஷ், “விஜபி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். தமிழில் மட்டுமல்ல. தெலுங்கிலும் அது பெரிய ஹிட். கொடி படப்பிடிப்பில் பொள்ளாச்சியில் இருந்த போது திடீரென விஐபி2 கதைக்கான ஐடியா வந்தது. நானே கதை எழுதினேன்.

பாலிவுட் நடிகை கஜோல் வசுந்தரா என்ற முக்கியமான வேடத்தில் நடிக்க ஓ.கே.சென்னது பெரிய பிளஸ். அது வில்லி வேடம் அல்ல. பெண்களை பற்றி படத்தில் உயர்வாக சொல்லியிருக்கிறோம். இன்னமும் 14 வயது பெண் மாதிரி உற்சாகமாக இருக்கிறார் கஜோல். சின்ன வயதில் பார்த்து வியந்த கஜோல் போன்ற நடிகையுடன் நடிப்பது சந்தோ‌ஷம்.

ரஜினி நடிக்கும் காலா படத்தை தயாரிக்கிறேன். அந்த படத்தில் சின்ன வயது ரஜினியாக நான் நடிக்கிறேன் என செய்திகள் வருகின்றன. ஹானஸ்டாக சொல்கிறேன். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை” என்றார்.


Post Comment

Post Comment