சிவபெருமான் வீரச்செயல் புரிந்த ஸ்தலங்கள் :


Posted by-Kalki Teamசிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். அந்த தலங்களை பற்றி பார்க்கலாம்.

சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.

பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்

ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று

சொல்லப்படுகின்றன. அவை.

1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.

2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.

3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.

4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.

5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.

6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்

7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை

8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.


Post Comment

Post Comment