சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்த “மாற்றம் ஒன்றே மாறாதது"


Posted by-Kalki Team



நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் `கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்ற பாடலில் இணைந்திருக்கின்றனர்.

அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது.

இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற பரிசு பாடல் ஒன்று தயாராகிறது. படத்தில் இடம்பெறாத இந்த பாடல், ஒரு ப்ரோமோ பாடலாக வெளியாகிறது.

இப்பாடலை உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடல் இன்று விஷுவலாக வெளியாக இருக்கிறது.

இப்பாடலில் நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், விஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என இயக்குநர் த.செ. ஞானவேல் தெரிவித்தார்.


Post Comment

Post Comment