கௌதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா புதிய கூட்டணி


Posted by-Kalki Teamதமிழ்த் திரையுலகத்தில் தற்போது புதிது புதிதாக சில கூட்டணிகள் உருவாகி வருகின்றன. தொடர்ச்சியாக பல படங்களில் இணைந்து வெற்றி பெற்ற பல இயக்குனர் - நடிகர் இயக்குனர் - இசையமைப்பாளர், நாயகன் - நாயகி என பார்த்த நமக்கு சில புதிய கூட்டணிகள் உருவாவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

அப்படி ஒரு புதிய கூட்டணி உருவாக தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பிரபல இயக்குனரான கௌதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கப் போகும் ஒரு படத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இந்தக் கூட்டணியில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். கபாலி படத்திற்குப் பிறகு பலரும் சந்தோஷ் நாராயணனை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் நாயகிகளில் ஒருவரும், தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் ரெஜினா நடிக்க உள்ளாராம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


Post Comment

Post Comment