விசேஷ அம்சம் கொண்ட எச்டிசி யு11 இந்தியாவில் வெளியானது :


Posted by-Kalki Teamஎச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அழுத்தி பிடித்தால் உங்களுக்கு விருப்பமான அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ள எச்டிசி யு11 முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட எச்டிசி யு11 ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவில் வெளியிட்டது. புதிய எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.51,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் எச்டிசி யு11 ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ள எச்டிசி யு11 முன்பதிவு ஜூன் 17-ந்தேதி துவங்குகிறது. எச்டிசி யு11 ஸ்மார்ட்போனினை எச்டிசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1,999 மதிப்புள்ள எச்டிசி பிளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிசி யு11 சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் குவாட் எச்டி 1440x2560 பிக்சல், சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே

* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், எச்டிசி சென்ஸ் ஸ்கின்

* 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

எச்டிசி யு11 கேமரா:

* 12 எம்பி பிரைமரி கேமரா, 1.4 மைக்ரான் பிக்சல்,

* அல்ட்ரா ஸ்பிரெட் ஆட்டோஃபோகஸ்

* f/1.7 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்

* 4K வீடியோ பதிவு செய்யும் வசதி

* 16 எம்பி செல்ஃபி கேமரா

எச்டிசி யு11 கனெக்டிவிட்டி:

* ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர்

* 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சாரக்ஜ் 3.0

* GPS/ A-GPS, GLONASS, யுஎஸ்பி 3.1

* டைப் சி-போர்ட், ப்ளூடூத் 4.2, வைபை, என்எஃப்சி

* IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

* கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா

புதிய எச்டிசி யு11 விசேஷ அம்சமாக அதன் ஸ்க்வீஸ் (squeeze) அம்சம் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் ஓரங்களில் அழுத்தி பிடித்து கேமரா, குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இத்துடன் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அம்சங்களையும் ஸ்க்வீஸ் ஜெஸ்ட்யூரில் சேர்க்க முடியும். இதனால் ஸ்மார்ட்போனின் ஓரங்களில் அழுத்தி பிடிக்கும் போது இயக்கப்பட வேண்டிய அம்சத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.

முன்னதாக எச்டிசி நிறுவனத்தின் யு11 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் ஆப்ஷன் மற்றும் அமேசிங் சில்வர், சஃபையர் புளூ, பிரில்லியண்ட் பிளாக், ஐஸ் வைட், சோலார் ரெட் நிறங்களில் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் புதிய எச்டிசி யு11 விற்பனை ஜூன் 26-ந்தேதி துவங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment