கால்கள், முழங்காலுக்கு வலுசேர்க்கும் ஆசனம்


Posted by-Kalki Teamவட்டாயானாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுகின்றன. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கால்கள், முழங்காலுக்கு வலுசேர்க்கும் ஆசனம்

செய்முறை :

விரிப்பில் நின்று கொண்டு நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து இடதுகாலை மடக்கி வலது பக்க தொடையில் வைத்து ஒரே காலில் நிற்கவும். வலது பக்க முழங்காலை மெதுவாக மடக்கி மடக்கப்பட்டுள்ள இடது பக்க முழங்கால் தரையில் படும்படி நிற்கவும்.

இந்த நிலையில் மிகச் சிறிது நேரம் நின்ற பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும். ஒரு காலில் நிற்கும் போது மூச்சை இழுக்கவும், உடலை கீழே கொண்டு வரும்போதும் உயர்த்தும் போதும் கும்பகம் செய்யவும்.

இறுதி நிலையில் சாதாரண சுவாசம் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.

பலன்கள் :

கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுகின்றன.

பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க இந்த ஆசனம் உதவுகிறது.Post Comment

Post Comment