முதுகெலும்பு, தோள்பட்டையை வலுவாக்கும் ஸ்வஸ்திக்காசனம் :


Posted by-Kalki Teamஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய பாகங்கள் வலுப்பெரும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

செய்முறை :

விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். வலக்காலை மடக்கி இடது பக்கத்தொடை மேல் வைக்க வேண்டும். இடக்காலை மடக்கி வலது பக்கத் தொடைக்கு மேல் வைக்க வேண்டும்.

வலக்கையை மடக்கி உள்ளங்கை வெளிப்புறமாகவும் சுட்டு விரலைப் பெருவிரலால் மடக்கியும், மாற்ற விரல்கள் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். அதே போல் இடக்கை மூன்று விரல்கள் கீழ்நோக்கியுமிருக்குமாறு செய்ய வேண்டும்.

உடலை நேராக்கி நிமிர்ந்து உட்கார வேண்டும் கண்களை இமைக்காமல் நேராகப் பார்க்க வேண்டும். மூச்சினை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட்டு இந்நிலையில் 3௦ விநாடிகள் இருக்கவும்.

பின் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.

பலன்கள் :

முதுகெலும்பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய பாகங்கள் வலுப்பெரும்.

சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும்.

Source -MalaiMalar


Post Comment

Post Comment