இறுதி சுற்று இயக்குநரின் படத்தில் விஜய் சேதுபதி!


Posted by-Kalki Teamவிஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றியை தருவதாக உள்ளது. இது அவரின் எதார்தமான நடிப்பை ரசிக்கும் ரசிகர்களின் ஆதரவின் மூலமாக என்பதை மறுக்க முடியாது.

வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 படங்களாவது ஒப்புக்கொள்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் அவரின் பெரும்பாலான படங்கள் வசூலில் கலக்கிவிடுகின்றன.

2012ல்ல் இவர் நடித்த சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. 2016-ம் ஆண்டில் தொடர்ந்து 6 படங்களை நடித்து சாதனையும் புரிந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா கோங்கரா. இந்த படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment

Post Comment