மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கு படமானது :


Posted by-Kalki Teamஎஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு படமானது.

ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்கி இருக்கிறார்.

இவர் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை, அருண் விஜய் நடித்த `ஜனனம் மற்றும் `வஜ்ரம் படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். மனோ என்ற புதுமுகம் ராம்குமார் வேடத்திலும், ஏ.வெங்கடேஷ் என்பவர் ராம்ராஜ் என்ற வக்கீல் வேடத்திலும் நடித்திருக்கிறார். சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார்.

நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும், பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் சுவாதி கொலை வழக்கில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.


Post Comment

Post Comment