விக்ரமின் `ஸ்கெட்ச் படத்தின் புதிய அப்டேட் :


Posted by-Kalki Teamவிஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்து வரும் `ஸ்கெட்ச் படக்குழு அடுத்ததாக படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறது.

தமன்னா தற்போது விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதில் விக்ரம் பைக் திருடும் வாலிபனாக நடித்துள்ளார். அவருடைய காதலியாக தமன்னா நடிக்கிறார். கவர்ச்சி இல்லாத குடும்ப பெண் வேடம்.

இருவரும் நடித்த காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டன. அடுத்து, சென்னை பின்னி மில்லில் ஒருபாடலுக்கு விக்ரம் நடனமாடும் காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

அடுத்து விக்ரம்-தமன்னா ஜோடியின் டூயட் பாடல் வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது. இதற்காக இருவரும் படக்குழுவினருடன் வெளிநாடு செல்கிறார்கள்.


Post Comment

Post Comment