தலைவலியை குணமாக்கும் சின்மய முத்திரை :


Posted by-Kalki Teamமனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.

செய்முறை :

விரிப்பில் அமர்ந்து கொண்டோ, அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.

இந்த நிலையில் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.


Post Comment

Post Comment