செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் அறிவிப்பு :


Posted by-Kalki Teamசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படமும் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம், தொடர்ந்து தள்ளிப்போகும்ம் நிலையில், படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என்று செல்வராகவன், அவரது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

ஜுன் 2-ல் முன்னோடி என்ற ஒருபடம் மட்டுமே வெளியாக இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. அதற்கு அடுத்த வாரமான ஜுன் 9-ல் மீசைய முறுக்கு, ரங்கூன் உள்ளிட்ட படங்களும், அதன் பின்னர் ஜுன் 23-ல் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஜெயம் ரவியின் வனமகன், விஷ்ணு விஷாலின் கதாநாயகன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின்றன.

எனவே ஜுன் 2-ந் தேதி படம் வெளியானால் தொடர்ந்து 3 வாரங்கள் எந்த நெருக்கடியும் இன்றி வசூலை அள்ளலாம். ஆனால் படத்தை ரலீஸ் செய்வது குறித்து படக்குழு என்ன முடிவு செய்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார்.


Post Comment

Post Comment