தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி :


Posted by-Kalki Teamதொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல் படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர்.

அந்த படத்திற்கு மாமனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலை சஸ்பென்ஸ் ஆக வைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post Comment

Post Comment