சச்சின் வாழ்க்கை வரலாறு படத்தில் இணைந்த `பாகுபலி-2 பிரபலம் :


Posted by-Kalki Teamவருகிற மே 26-ல் உலகெங்கும் வெளியாக இருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாறு படத்தில் `பாகுபலி-2 படத்தின் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார். இதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். என்னை பெரியதாக யோசிக்க வைத்த இரு பிரபலங்களான சச்சின், ஏ.ஆர்ரகுமான் இணைந்துள்ள படத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் `பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பிற்கு, கார்க்கி வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment