திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது :


Posted by-Kalki Teamஅரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்றப்பட்டபோது எடுத்தபடம்.

அரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி சங்கராபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவருதல், பால்சாகை வார்த்தல், அய்யனார் கோவிலில் குதிரை விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. இதில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் தினமும் மகாபாரத பக்தி சொற்பொழி, 29-ந் தேதி கரக திருவிழா, அம்மன் வீதிஉலா, 30-ந் தேதி பக்காசூரன் வதம், 31-ந் ே- ததி அர்ச்சனன், திரவுபதி திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு முத்துப்பல்லக்கு, ஜூன் 1-ந் தேதி தவசு உற்சவம், கருட வாகன வீதிஉலா ஆகியவை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 2-ந் தேதி தீமிதியும், 3-ந் தேதி மஞ்சள் நீராட்டும், 4-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.


Post Comment

Post Comment