ஸ்ரீதேவியின் Mom திரைப்படம் ஜூலை 7 ல் ரிலீஸ்!


Posted by-Kalki Teamஸ்ரீதேவியை தமிழ் ரசிகர்கள் கடைசியாக திரையில் எப்போது பார்த்தார்கள்? புலி திரைப்படத்தில் பார்த்திருப்பார்கள். பாலிவுட்டில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இங்லீஷ் விங்லீஷில் கண்டிருப்பார்கள். இந்த ஆண்டு ஸ்ரீதேவியின் Mom திரைப்படம் வெளியாகவிருக்கிறதாம்.

அதுவும் எப்போது தெரியுமா? 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி முதல்முறையாக கேமராவுக்கு முன்பு நின்று நடித்த நாளான ஜூலை 7 ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக முடிவு செய்திருக்கிறாராம் அவரது கணவர் போனி கபூர். 1967 ஆம் ஆண்டு அதே ஜூலை 7 ல் தான் ஸ்ரீதேவி தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனால் திரையுலகப் பிரவேஷத்தில் தன் மனைவியின் ஸ்பெஷல் தினங்களில் ஒன்றான அன்றே Mom திரைப்படத்தை வெளியிடலாம் என போனி கபூர் முடிவு செய்திருக்கிறார்.

நேரடி இந்திப் படமான Mom திரைப்படம் தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்ய்யப்பட வேண்டும் என்பது போனி கபூரின் விருப்பம். எனவே இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் டப் செய்யப்படவுள்ளதாகக் கூறுகின்றனர்.Post Comment

Post Comment