தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் :


Posted by-Kalki Teamதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பவர் பாண்டி படத்தை முடித்த கையோடு தனுஷ் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க தயாரானார். இந்நிலையில், தற்போது அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெல்ஜியம் நாட்டில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை கனடா நாட்டை சேர்ந்த இயக்குனர் கென் ஸ்காட் இயக்கி வருகிறார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்ற பிரபல பிரெஞ்சு நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களான பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியாட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக தனுஷ் 3 மாதங்கள் ஒதுக்கியுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு வடசென்னை, மாரி-2, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.


Post Comment

Post Comment