மலர்ந்த பூக்களாக பெண்களின் மனதை கவரும் நகைகள் :


Posted by-Kalki Teamதற்போது பெண்களை கவரும் வகையில் பல வண்ண வடிவங்களிலும் அளவுகளிலும் பூக்களின் டிசைன்கள் தங்க, வெள்ளி மற்றும் கல் நகைகளில் அழகான நகைகள் வந்துள்ளன.

பூக்களின் வடிவங்களை துணிகளிலும் நகைகளிலும் நாம் பெரும்பாலான பார்ப்போம். பல வண்ண திறங்களிலும் வடிவங்களிலும் அளவுகளிலும் பூக்களின் டிசைன்கள் தங்க, வெள்ளி மற்றும் கல் நகைகளில் அழகான தோற்றத்தையும் வடிவமைப்பையும் கொடுக்கக்கூடியது. இதில் தற்போது பல புதிய வித்தியாசமான பூ டிசைன் நகைகள் வந்துள்ளன. அவை பார்க்க அசல் பூக்கள் போலவே மெல்லிய இதழ்களை கொண்டவைகளாகவும், அடுக்கடுக்கமான தோற்றம் கொண்டவைகளாகவும் தத்ரூபமான பூக்களை போலவே காட்சியளிக்கின்றன.

தங்கத்தில் பூக்கள் :

தங்கத்தில் செய்யப்படும் இப்புதிய பூ டிசைன்கள் தங்க நிறத்தில் நிஜ பூக்கள் இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கின்றன. மிகமிக மெல்லிய தங்கத்தகடுகளில் பூ இதழ்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஒளி ஊடுருவக்கூடிய அளவிலான மெல்லிய தகடாக இவை இருப்பதால் ஒவ்வொரு இதழும் மெல்லிய இழைகளாக பின்னப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.

இப்படி மெல்லிய பல இதழ்கள் கொண்ட சிறு சிறு பூக்களை ஒன்றினைத்து மாலைகளாகவும், வரிசையாகவும் இணைத்து வளையலாகவும், ஒற்றைப் பூக்கள் கொண்ட கம்மல்களாகவும் இந்த நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த பூக்களின் நடுவில் சிவப்பு நிற கெம்பு அல்லது பச்சை நிற கற்கள் பதிக்கப்பட்டு மிக அழகாக உள்ளன.

கற்களில் பூக்கள் :

சிவப்பு நிற கெம்பு, பவள முத்து, பச்சை நிற ஜேட் கற்கள் போன்றவற்றில் அழகழகான பூக்கள் செதுக்கப்பட்டு அவை கோர்த்து மாலைகளாகவும், நெக்லசாகவும், வளையலாகவும், கம்மலாகவும் வடிவமைக்கப்படுகின்றன. இந்த வகை நகைகள் பார்க்க உண்மையான பூக்களைப்போல தத்ரூபமாகவும், பல வண்ணங்கள் உள்ளதால் மிக கவர்ச்சியாகவும் இருக்கின்றன.

கற்களால் செதுக்கப்படும் இந்த பூக்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் எவற்றில் பதிக்கப்பட்டாலும் எடுப்பாகவும் அழகாகவும் தோற்றமளிக்கிறது. பூ வடிவத்தில் இருக்கும் தங்க டிசைனில் வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டு வரும் நகைகள் ஆர்வமில்லாதவர்கள், கற்களே பூக்கள் வடிவத்தில் உள்ள இந்த நகைகளை விரும்பி அணிவார்கள்.

பூக்கள் போலவே தோற்றமளிக்கும் இப்புதிய டிசைன் நகைகள் இலைகள், காம்புகள் போன்றவற்றிற்கு பச்சை நிறம் மற்றும் இதழ்களுக்கு மற்ற வண்ணங்கள் கொண்ட எனாமல் பாலிஷ் செய்தும் பூக்களின் வடிவத்தில் நகைகள் செய்யப்படுகின்றன. அசல் பூக்கள் போல் காட்சியளிக்கும் இந்த புதிய டிசைன் நகைகள் இன்றைய இளம் பெண்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.


Post Comment

Post Comment