சத்து நிறைந்த சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம் :


Posted by-Kalki Teamசிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து சத்து நிறைந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி மாவு - கால் கிலோ

கேழ்வரகு மாவு - கால் கிலோ

உப்பு - சிறிதளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும்.

* குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

* சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.


Post Comment

Post Comment