தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு :


Posted by-Kalki Team`அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையையும் அவதார் முறியடித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி `அவதார் 2 - டிசம்பர் 18 2020, `அவதார் 3 - டிசம்பர் 17 2021, `அவதார் 4 - டிசம்பர் 20 2024, `அவதார் 5 - டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட் படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார் உலகம்) தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.


Post Comment

Post Comment