`சாமி-2 படத்தில் விக்ரமுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் :


Posted by-Kalki Teamஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள `சாமி-2 படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.

இதில் `சாமி படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2 விலும் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் சாமி முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அதன் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுவரவாக, `சாமி-2 படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ்-ம் இணைய உள்ளாராம். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரி முன்னதாக `சிங்கம்-2, `சிங்கம்-3 படங்களில் இரு நடிகைகளை ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் `சாமி-2 படத்திலும் இரு ஹீரோயின்களை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

கீர்த்தி சுரேஷ் தற்போது, சூர்யாவுடன் இணைந்து `தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும், தமிழ், தெலுங்க என இரு மொழிகளில் உருவாக உள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இன்னும் மூன்று மாதங்களில் `சாமி-2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஹரி பிசியாக இருக்கிறார்.


Post Comment

Post Comment