வேலைக்காரன் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம் :


Posted by-Kalki Teamமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படக்குழுவுடன் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகத் பாஸில் அப்பாவாக மகேஷ் மன்ஜரேக்கர் நடிக்க உள்ளதாக படக்குழுவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் மன்ஜரேக்கர் இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான `ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முக்கால்வாசி படக்காட்சிகளை முடித்துள்ள படக்குழு, தற்போது மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29)-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.


Post Comment

Post Comment