சிவபெருமான் பற்றிய சிறப்பு தகவல்கள் :


Posted by-Kalki Teamசிவபெருமான் மற்ற கடவுள்களைப் போல் ஆரம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், எப்போதுமே எளிமையான தோற்றத்தில் காணப்படுவார். சிவபெருமான் பற்றிய சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

சிதம்பர ரகசியம் :

ஒன்றுமில்லை என்றே அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்தத் தலத்தில் குடி கொண்டிருக்கிறார். ஆகாயம் எப்படி உருவமற்றதோ அதேபோல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது. அதாவது ஒன்றுமில்லாதது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.

லிங்கத்தில் அமைந்த பிற தெய்வங்கள் :

சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

திருவானைக்காவல் கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப்பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.

ஊமத்தம் பூ பூஜை :

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக் கடல் சிவபெருமான். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள, அகலும், சித்தம் தெளியும்.

திப்பு சுல்தான் வழங்கிய மரகத லிங்கம் :

மைசூர் நஞ்சன்கூட்டில், சிறப்புமிக்க நஞ்சுண்டேசுவரர் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களுக்கும் பெரிய அளவிலான அற்புதமான கற்சிலைகளை இந்த கோவிலில் காணலாம். இந்த கோவிலில் ஒரு ‘மரகத லிங்கம்’ உள்ளது. இது திப்பு சுல்தானால் அளிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஐம்பது லட்ச ரூபாய் மதிப் புள்ள நகைகளை திப்பு சுல்தான் இந்த கோவிலுக்கு கொடுத்ததாக கோவிலை கட்டியுள்ளனர் என்பது தான் இந்த கோவிலின் சிறப்பு.


Post Comment

Post Comment