கணுக்கால், கால் மூட்டை வலுவாக்கும் உட்கட்டாசனம் :


Posted by-Kalki Teamஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் மூட்டு வீக்கம் நீங்கும். இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை:

நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும். உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும்.

தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும். முன் பக்க உடம்பை வளைக்க கூடாது.

கால அளவு:

20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின் நன்றாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும்.

பலன்கள்:

கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் முட்டி பலம் பெறும். தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும்; கால் மூட்டு வீக்கம் நீங்கும்.Post Comment

Post Comment