மாங்காய் தொக்கு :


Posted by-Kalki Teamஎன்னென்ன தேவை?

மாங்காய் - 2

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பனைவெல்லம் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க...

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 6

பெருங்காயம் - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

மாங்காய் தோலை உறித்து, துருவி வைக்கவும். வெறும் கடாயில் வெந்தயம் எடுத்து வறுத்து பொடியாக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் துருவி வைத்த மாங்காய் சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 - 7 நிமிடங்கள் சமைக்கவும். பின் பொடியாக்கி வைத்த வெந்தயம், பனைவெல்லம் சேர்க்கவும். மற்றெரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மாங்காய் தொக்கில் ஊற்றவும். தொக்கை நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.Post Comment

Post Comment