உங்கள் யோகா போஸை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : அர்த்த் (பாதி)பிகாசனா


Posted by-Kalki Teamஅர்த்த பிகாசனா அல்லது பாதி தவளை போஸ் மார்பை திறக்கும் போஸாக மிகவும் பிரபலமானது கூட மற்றும் யோகா பின்வளைவுகள் பிரிவில் அடங்கும். இது ஆரம்ப நிலையாளர்களுக்கு ஒரு சவாலான போஸ் எனவே ஒரு கண்காணிப்பின் கீழ் பயிற்சி செய்ய வேண்டும். இந்த போஸை பயிற்சி செய்யும் போது உங்கள் முன் உடல் ஆதரவுக்கு ஒரு தாங்கி பிடித்தல் அல்லது குஷனை உபயோகப் படுத்தலாம். யோகா நிபுணர், மவ்வா டெப், பயிற்சியாளர். பாதுகாப்பு நல சங்கம், மற்றும் விசாகப்பட்டின நகர அபிவிருத்தி அதிகாரி இந்த ஆசனாவை எப்படி சரியாக செய்வது மற்றும் அத்ன நன்மைகள் பற்றி சொல்கிறார். நிலைகள் :

1. உங்கள் வயிறு அல்லது சாய்ந்திருக்கும் போஸில் படுத்துக் கொள்ளுங்கள்.

தரையில் உள்ளங்கைகளை வையுங்கள்

2. உள்ளங்கைகளை நிலத்தில் அழுத்துவதன் மூலம் உங்கள் தலையை உயர்த்துங்கள்.

3. முழங்காலில் உங்கள் வலது காலை பின்புறமாக வளைத்து வலது பாதத்தை அடியில் அல்லது தரையை நோக்கி பிடித்துக் கொள்ளுங்கள். வலது முழங்கை மேல் நோக்கி பார்த்திருக்க வேண்டும்.

4. இந்த போஸில் 30 விநாடிகளிலிருந்து ஒரு நிமிட்ம வரை இருங்கள். மறுபக்கத்தில் திரும்பச் செய்யுங்கள்.

அர்த்த பிகாசனம் அல்லது பாதி தவளை போஸின் நன்மைகள்:

இந்த போஸ் உங்கள் முன்பகுதி உடலை நீட்சி செய்வதில் உதவுகிறது. இது தொடை, இடுப்பு, கணுக்கால் மற்றும் வயிற்று தசைகளையும் நீட்சி செய்கிறது.

இது தொண்டை மற்றும் மார்புக்கு பயனளிக்கும். மார்பை திறப்பதன் மூலம், அது உங்கள் முழு சுவாசங்களை பெற உதவுகிறது மற்றும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

அது ஒரு பினவளையும் போஸ் என்பதால், அது பின் முதுகு தசைகளையும் வலுபடுத்த வழி வகுக்கிறது.

இது வயிற்று தசைகளைத் தூண்டுகிறது மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது.

இது தோற்றபாங்கை மேம்படுத்துவதில் உதவுகிறது.

அதிக மற்றும் குறைவான ரத்த அழுத்தத்துடன் இருப்பவர்கள், ஓற்றைத் தலைவலி, பின்முதுகு, கழுத்து அல்லது தோள் வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திய குறைக்க இந்த யோகா போஸ்களை முயற்சி செய்யலாம் .


Post Comment

Post Comment