பிஎஸ் IV ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது :


Posted by-Kalki Teamரூபாய் 1,60,500 விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மே மாத மத்தியில் FI எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட உள்ளது.

ரூ 5000 செலுத்தி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI பைக்கிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

மே மாத மத்தியில் ஹிமாலயன் ஃப்யூவல் இன்ஜெக்சன் மாடல் பைக் டெலிவரி தரப்பட உள்ளது.

முந்தைய கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சினுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

200 மிமீ பயணிக்கும் வகையிலான 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் முன் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது.

பின் சக்கரத்தில்,மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. முன்புற டயரில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக் , பின் டயரில் ஒற்றை பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் ரிம் ஸ்போக்குகளை பெற்று முன்பக்க சக்கரம், 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.

முந்நைய மாடலை விட கூடுதலாக ரூபாய் 6000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீலர்கள் வாயிலாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால் மே மாத மத்தியில் டெலிவரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post Comment

Post Comment