மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா?


Posted by-Kalki Teamதிருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தினை அணிவிக்கும் போது கூறப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தினை அணிவிக்கும் போது கூறப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த மந்திரத்திற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம் என்னும் குறித்த மந்திரத்தின் பொருள்

மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக என்பதாகும்.


Post Comment

Post Comment