மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி :


Posted by-Kalki Teamவரலட்சுமி மீண்டும் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

தமிழில் போடா போடி, தாரை தப்பட்டை ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமி, கடந்த வருடம் மம்முட்டி நடித்த கசபா படம் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார். அதன்படியே, இந்த வருடம் சமுத்திரகனியின் அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி நடிக்க வாய்ப்பு கிட்டியது.

ஆனால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு விலகிவந்தார். இந்நிலையில், இதை ஈடுகட்டும் விதமாக மலையாளத்தில் மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மம்முட்டியை வைத்து ராஜாதி ராஜா என்ற மலையாள படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான புலிமுருகன் படத்தின் கதாசிரியர் இப்படத்திற்கு கதை எழுதவிருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக முதலில் ராய் லட்சுமியைத்தான் படக்குழுவினர் அணுகியுள்ளார். ஆனால், ஒருசில காரணங்களால் ராய் லட்சுமி நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு வரலட்சுமிக்கு கிட்டியுள்ளது.

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி ஏற்கெனவே நடித்த ராஜாதி ராஜா படத்தில் ராய் லட்சுமிதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment