பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி :


Posted by-Kalki Teamபாலிவுட் பிரபலம் பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.

மைனே பியார் கியா என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தனது முதல் படத்தின் மூலமே 1979-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்த அவர் பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார். அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டினார். இந்நிலையில், பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்‌ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க உள்ளார். வாசன் இயக்கவுள்ள இப்படத்தை அனுராக் காஷ்யப் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு `மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான `கவண் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் நடித்துள்ள `புரியாத புதிர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதுதவிர, `விக்ரம் வேதா, `கருப்பன், `அநீதி கதைகள், `96 உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment