மீண்டும் களமிறங்கும் கேலக்ஸி நோட் 7: புதுப்பித்து வெளியிட சாம்சங் முடிவு :


Posted by-Kalki Teamசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 7, பேட்டரி பிழை காரணமாக வெடித்து சிதறியது. இதனால் வெளியிடப்பட்ட இரண்டே மாதங்களில் நோட் 7 சர்வதேச விற்பனை நிறுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களும் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 ஸ்மார்ட்போனிற்கான பேட்டரியை சாம்சங் எஸ்டிஐ கோ லிமிட்டெட் மற்றும் அம்பெரெக்ஸ் டெக்னாலஜி லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கின.

சாம்சங் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் நோட் 7 பேட்டரியை தவிர இதர பாகங்களில் எவ்வித கோளாறும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனை மூலம் சாம்சங் சந்தித்த இழப்புகளை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனை சாம்சங்கின் கேலக்ஸி S8 வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட் 7 விற்பனை தொடர்பாக விதிமுறை அதிகாரிகள், டெலிகாம் ஆப்பரேட்டர்கள் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் தேவை உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் இருந்து திரும்ப பெறும் முன் சுமார் 30 லட்சம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை சாம்சங் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment